நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
டேன்டீயை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி
பந்தலூர்,
டேன்டீயில் தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியிருப்புகளை அவர்கள் குடியிருக்கும் அதே இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், டேன்டீ தோட்டங்களை வனத்துறையினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை நிர்வாகம் கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் பந்தலூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு தொழிற்சங்க பேரவை தொகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் டேன்டீ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், டேன்டீயில் நடந்துள்ள நிர்வாக முைறகேடுகளை விசாரிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story