ரூ.8 லட்சத்தில் மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி


ரூ.8 லட்சத்தில் மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி
x

வேப்பனப்பள்ளி அருகே ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியை கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளி அருகே கொரலாக்கம் கிராமத்தில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. வேப்பனப்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, மாரசந்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் சைலேஸ் கிருஷ்ணன், கிளை செயலாளர் பொன்னையன், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story