விக்கிரவாண்டியில் இன்று வாக்குப்பதிவு: 276 வாக்குச்சாவடிகளும் இணைய வழியில் கண்காணிப்பு


விக்கிரவாண்டியில் இன்று வாக்குப்பதிவு: 276 வாக்குச்சாவடிகளும் இணைய வழியில் கண்காணிப்பு
x

கோப்புப்படம் 

விக்கிரவாண்டியில் உள்ள 276 வாக்குச்சாவடிகளும் இணைய வழியில் கண்காணிக்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. அங்கு வாக்குப்பதிவிற்காக 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் காணொலி வழியாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமைச்செயலகத்தில் இருந்தபடி நேற்று ஆலோசித்தார்.

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 276 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் இணையவழியில் இணைக்கப்பட்டுள்ளன.

அந்த கேமராக்கள் மூலமாக காட்சிகளை பார்வையிட்டு, வாக்குப்பதிவு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் இருந்து இடைத்தேர்தல் வாக்குப்பதிவை கண்காணிக்க முடியும். இந்த தேர்தலுக்காக 3 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பிற்காக ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story