தன்னார்வலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்
மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த தன்னார்வலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவித்திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் கூறினார்.
ராஜபாளையம்,
மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த தன்னார்வலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவித்திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் கூறினார்.
தன்னார்வலர்களுக்கு பயிற்சி
ராஜபாளையம் அருகே தொட்டியபட்டி கிராமத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வட்டார வளமையத்தில் நடைபெற்றது. பயிற்சிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை தலைமை தாங்கினார்.
ஆசிரிய பயிற்றுனர் லிங்கேஸ்வரி வரவேற்றார். தன்னார்வலர்களுக்கான கையேட்டை வழங்கி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தன்னார்வலர்கள் குழந்தைகளின் இயல்புகளை புரிந்து கொண்டு அவர்களின் தனித்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து, உள்ளார்ந்த திறன்களையும் படைப்பாற்றலையும் வெளிக்கொணரத்திட்டமிட்டு இக்கையேடு வடிவமைக்கப்பட்டு தொடக்க நிலையில் உள்ள மாணவர்களுக்கு எழுத்தறிவும், எண்ணறிவும் வளர்த்தெடுப்பதற்கு ஏதுவாக, வலுவூட்டும் செயல்பாடுகள் விளையாட்டு முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உறுதி செய்ய வேண்டும்
இந்த கையேட்டில் அனைத்து நிலையில் உள்ள மாணவர்களும் அவரவர் வயதுக்கும், வகுப்புக்கும் உரிய கற்றல் அடைவுகளை அடைவதற்கு தேவையான செயல்பாடுகள் தன்னார்வலர்கள் அனைத்து மாணவர்களும் உரிய கற்றல் அடைவுகளை அடைந்ததை உறுதி செய்ய வேண்டும்.
அவ்வாறு கற்றல் அடைவுகள் அடைந்திடாத மாணவர்களுக்கு உரிய செயல்பாடுகளை அளித்து, கற்றல் அடைவு பெற்றிட உறுதுணை புரிய வேண்டும். மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த தன்னார்வலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ், ஆசிரியப் பயிற்றுனர்கள் முத்துராஜ், ஈஸ்வரன், சுபதர்ஷினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.