நெய்வேலியில் பாமக போராட்டத்தில் வன்முறை வெடித்தது - போலீசார் மீது கல்வீச்சு
தண்ணீர் பீய்ச்சி அடித்து, தடியடி நடத்தி போராட்டக்காரர்களை போலீசார் கலைத்து வருகின்றனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர். அன்புமணி ராமதாஸ் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. போலீசார் வாகனம் மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசியதில் போலீசார் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் கற்களை வீசியதால், போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அத்துடன், தண்ணீர் பீய்ச்சி அடித்து, தடியடி நடத்தி போராட்டக்காரர்களை போலீசார் கலைத்து வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது.
Related Tags :
Next Story