சாலை விதிமுறை மீறல்கள்: பைக் ரேஸ் -ரூ.10,000, ஹெல்மெட் - ரூ.1500 - வாகன ஓட்டிகளே உஷார்..!!


சாலை விதிமுறை மீறல்கள்: பைக் ரேஸ் -ரூ.10,000, ஹெல்மெட் - ரூ.1500 - வாகன ஓட்டிகளே உஷார்..!!
x

கோப்புப்படம்

புதிய போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை வருகின்ற 28ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மோட்டார் வாகன சட்டம் 2019-ல் சில திருத்தங்கள் மேற்கொண்டு அபராத தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதன்படி அபராத தொகைகள் அதிக அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது.

பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. புதிய போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை வருகின்ற 28ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கிறது.

இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வேகமாக செல்வது : ரூ 1000( முதல் முறை) ரூ 10,000 ( இரண்டு மற்றும் இரண்டாம் முறைக்கு மேல்)

இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது : ரூபாய் ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரை.

இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன பந்தயத்தில் (Race) ஈடுபடுவது : 15,000 (முதல் முறை) - ரூ.25,000( இரண்டாம் முறை மற்றும் அதற்கு மேல்)

இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சைலன்சர் மாடிஃபிகேஷன் : ரூ.1000

சிக்னல் விதிமீறல் : ரூ.500-1500

நிறுத்தற் கோடுகள் விதிமீறல் : ரூ. 500 - ரூ.1500

உடல் மற்றும் மனதளவில் வாகனங்களை இயக்க தகுதியற்றவர்கள் : ரூ.1000 - ரூ.2000

மியூசிக்கல் ஹாரன் மற்றும் ஏர் ஹாரன் : ரூ.500

வாகன பதிவு(Registration) இல்லாமல் வாகனம் இயக்குவது : ரூ.2500 - ரூ.5000

லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் இயக்குவது : ரூ. 5000

போன் பேசிக் கொண்டே வாகனங்கள் இயக்குவது : ரூ.1000 (முதல்முறை) ரூ.10000 ( இரண்டாம் முறை மற்றும் அதற்கு மேல்)

கார் மற்றும் கனரக வாகனங்களால் காற்று மாசு : ரூ.10,000

இருசக்கர வாகன இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் இயக்குவது : ரூ.2,000 - ரூ.4,000

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது : ரூ.500

பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் செல்வது : ரூ.500

மது குடித்து வாகனம் ஓட்டுவது : அபராதம் : ரூ. 10,000

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் மற்றும் அரசு அவசர போக்குவரத்திற்கு வழி விடாத நபர்கள் மீது ரூபாய் 10,000 அபராதம் வசூலிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story