விநாயகர் சதுர்த்தி: சென்னை- கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


விநாயகர் சதுர்த்தி: சென்னை- கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை- கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரல் - கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரல் - கோவை சிறப்பு ரெயில் (06151) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு திருவள்ளுவர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 8.28 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக 11.45 மணிக்கு கோவை சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் கோவை - சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் (06152) வருகிற 8-ந் தேதி கோவையில் இருந்து 11.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக இரவு 1.47 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளுவர் வழியாக மறுநாள் காலை 7.35 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story