விளவங்கோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி...?


விளவங்கோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி...?
x

விளவங்கோடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன், விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதனால் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வெற்றி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் 34,306 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வி.எஸ். நந்தினி 14,300 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். வி.எஸ்.நந்தினியை விட தாரகை கத்பட் 20,006 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதன்மூலம் விளங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி உறுதியாகி உள்ளது.

நாதக வேட்பாளர் ஜெமினி - 2,295

அதிமுக வேட்பாளர் யு.ராணி - 1,954


Next Story