விஜயகாந்த் பிறந்தநாள் விழா


விஜயகாந்த் பிறந்தநாள் விழா
x

சங்கராபுரம் தெற்கு ஒன்றிய தே மு தி க சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் தெற்கு ஒன்றிய தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 70 வகையான மரக்கன்றுகள் வழங்கும் விழா சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடைபெற்றது. இதற்கு தொகுதி பொறுப்பாளரும், மாவட்ட வர்த்தக அணி செயலாளருமான சுதாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் குமார், முருகன், ஒன்றிய துணை செயலாளர் இளங்கோவன், மகளிர் அணியினர் சுசீலா, பிரியா, சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர நிர்வாகி ராதாகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.டி.முருகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகளை வழங்கி பேசினார்.

முன்னதாக சங்கராபுரம் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு, செம்பராம்பட்டு கிராமத்தில் மாணவர்களுக்கு நோட்டு, பேனா ஆகியவற்றை வழங்குதல், பாவளம், ஊராங்காணி, எஸ்.வி.பாளையம், அரசம்பட்டு, பொய்க்குணம், வளையாம்பட்டு, புத்திராம்பட்டு, பூட்டை ஆகிய கிராமங்களில் கட்சி கொடியேற்றி கேக் வெட்டி, இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நிர்வாகிகள் சீனு, குமார், ராஜா, செல்வம், இளங்கோ, சுரேஷ், அண்ணாமலை, கோவிந்தன், ஜெயக்கண்ணு, தண்டபாணி, பரசுராமன், கோதண்டபாணி, சண்முகம், கொளஞ்சி, அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story