விஜய் கட்சி 6 மாதம்தான், அதற்கு மேல் தாங்காது - அமைச்சர் தா.மோ. அன்பரசன் விமர்சனம்


விஜய் கட்சி 6 மாதம்தான், அதற்கு மேல் தாங்காது -  அமைச்சர் தா.மோ. அன்பரசன் விமர்சனம்
x

யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்படக்கூடாது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

சென்னை,

நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாடு வரும் 23-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. மிக நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த விஜய் கட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது. விக்கிரவாண்டியில் விஜய் நடத்தும் முதல் மாநாட்டை அனைத்து அரசியல் கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

இந்தநிலையில், சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது:-

இன்று நடிகர்கள் எல்லாம் அரசியல் பக்கம் வந்துவிட்டனர். ஏற்கனவே வந்த நடிகர் நிலைமை எல்லாம் என்ன என்று நாம் பார்த்துவிட்டோம். அதேபோல் தற்போது ஒருவர் அரசியலுக்கு வந்துள்ளார். யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்படக்கூடாது என்றும் நிலைத்திருக்கும் ஒரே கட்சி திமுகதான்.

விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. அதனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 6 மாதங்கள்தான் தாக்குப் பிடிக்கும். அதற்கு மேல் தாங்காது. சினிமாவுக்கு வருகிற கூட்டத்தை பார்த்து நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார். 6 மாதத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் என்ற சினிமா பெட்டியை உள்ளே வைத்துவிடலாம் எனப் பேசியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story