சிவகாசியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
சிவகாசியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைெபற்றது.
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட கோபாலன்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் கோவில்ராஜா தலைமையில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தெய்வேந்திரன் முன்னிலை வகித்தார். முகாமை யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், குடற்புழு நீக்கம், ஆடு மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி என 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. இதில் சிறந்த கால்நடை பராமரிப்பு உரிமையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் உதவி இயக்குனர் ராஜராஜேஸ்வரி, கால்நடை மருத்துவர்கள் விஜய், சசி, தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கராசா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.