வேளாண்மை கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி
கரூர் வேளாண்மை கல்லூரியில் நடந்த மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிநடைபெற்றது. 77 பேர் தேர்வு
77 பேர் தேர்வு
கரூர் மாநகராட்சி பல்நோக்கு மைய கட்டிடத்தில் தற்காலிகமாக கரூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. கரூர் வேளாண்மை கல்லூரியில் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை மற்றும் வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டன.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொது கலந்தாய்வு மூலம் கரூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சேருவதற்கு 71 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து நேற்று கல்லூரியின் முதன்மை அலுவலர் பாலசுப்ரமணியன் தலைமையில் மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
சான்றிதழ் சரிபார்ப்பு
இதில் மாணவ, மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தேவையான வருவாய்த்துறை சான்றிதழ்கள், சுய விவர சான்றிதழ்கள் மற்றும் விடுதி கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்தும் பேராசிரியர்களால் சரிபார்க்கப்பட்டு மாணவ, மாணவிகளின் சேர்க்கை நடைபெற்றது.
இதுகுறித்து கல்லூரியின் முதன்மை அலுவலர் பாலசுப்ரமணியன் கூறும்போது, கலந்தாய்வின் மூலம் 71 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று, வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும், என்றார்.