வேங்கை வயல் விவகாரம்: புதிய விசாரணை அதிகாரியை நியமனம் செய்து உத்தரவு


வேங்கை வயல் விவகாரம்: புதிய விசாரணை அதிகாரியை நியமனம் செய்து உத்தரவு
x

வேங்கை வயல் விவகாரத்தில் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வரும்நிலையில், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் இவ்வழக்கு 2023ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.147 நபர்களிடம் விசாரணை, டி.என்.ஏ. பரிசோதனை என பல்வேறு வகைகளில் கடந்த 394 நாட்களாக நடத்தப்பட்டு வரும் இந்த வழக்கில், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதன்படி வேங்கை வயல் விவகாரத்தை விசாரித்து வந்த விசாரணை அதிகாரி திருச்சி சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. பால்பாண்டி மாற்றப்பட்டு, புதிய விசாரணை அதிகாரியாக தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கல்பனா தத் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.


Next Story