நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ- பாஸ் தேவையில்லை


நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ- பாஸ் தேவையில்லை
x

வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரிக்கு மாற்றம் செய்திருப்பவர்கள், அதற்கான ஆவணங்களுடன் உதகை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை அணுகி இ-பாஸ் பெறலாம்

நீலகிரி,

கொரோனா காலகட்டத்தில் பின்பற்றப்பட்டது போல கோடை காலத்திலும் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும், வாகனங்களுக்கும் வரும் மே 7-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.

இ-பாஸ் வழங்கும் முன்பாக எந்த மாதிரியான வாகனங்களில் எத்தனை பேர் வருகை தருகின்றனர்? அவர்கள் எத்தனை நாட்கள் தங்கப்போகின்றனர்? எங்கு தங்கவுள்ளனர்? போன்ற விவரங்களையும் பெற்றுக்கொண்டு, சுற்றுலா தலங்களில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளையும் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இ பாஸ் பெறுவதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்ட வாகனங்களுக்கான உத்தரவு ஒன்றை நீலகிரி வட்டார போக்குவரத்து அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- நீலகிரி மாவட்ட பதிவு எண் ( டிஎன்43) கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரிக்கு மாற்றம் செய்திருப்பவர்கள், அதற்கான ஆவணங்களுடன் உதகை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை அணுகி இ-பாஸ் பெறலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story