அனுமதித்த பாதையில் மட்டும் வாகனங்கள் செல்ல வேண்டும்


அனுமதித்த பாதையில் மட்டும் வாகனங்கள் செல்ல வேண்டும்
x

மருதுபாண்டியர்கள், தேவர் குருபூஜைக்கு அனுமதித்த பாதையில் மட்டும் வாகனங்கள் செல்ல வேண்டும் என கலந்தாய்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் மருதுபாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு கலந்தாய்வு கூட்டம் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, பசும்பொன் தேவர் மக்கள் இயக்கம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகமுடையார் உறவின் முறை, முக்குலத்தோர் உறவின்முறை ஆகியவற்றின் முக்கிய நிர்வாகிகள், வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கலந்தாய்வு கூட்டத்தில் மருதுபாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு செல்லும் நபர்கள் வாடகை வாகனங்களில் செல்லக்கூடாது. போலீசிடம் அனுமதி பெற்று அடையாள அட்டை பெற்ற வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும். போலீசார் அனுமதித்த பாதையில் மட்டுமே செல்ல வேண்டும். பிற சமுதாயத்தினரையோ, பிற மதத்தினரையோ பாதிக்கும் வகையில் முழக்கங்கள் எழுப்பக் கூடாது. பேனர்கள், கட் அவுட்கள் வைக்க அனுமதி கிடையாது. போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என விதிமுறைகள் குறித்து போலீசார் விளக்கினர். போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.


Next Story