'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி


நான் முதல்வன் திட்டத்தின் கீழ்  கல்லூரி கனவு நிகழ்ச்சி
x

தேனி மாவட்டத்தில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு ‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடந்தது.

தேனி

தேனி மாவட்டத்தில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது பிளஸ்-2 படித்து முடித்தவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் கையேட்டை கலெக்டர் வெளியிட்டார். மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு உயர்கல்வி குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாணவ, மாணவிகள் வந்து செல்வதற்காக தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தில் இருந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றனர்.


Next Story