எந்திரம் மூலம் உளுந்து சாகுபடி


எந்திரம் மூலம் உளுந்து சாகுபடி
x

எந்திரம் மூலம் உளுந்து சாகுபடி

திருப்பூர்

போடிப்பட்டி

மக்காச்சோள விதைப்பு எந்திரம் மூலம் உளுந்து விதைத்து, விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயியின் தோட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விதைப்பண்ணை

திருப்பூர் மாவட்டத்தில் 2,925 ஏக்கரில் பயறு வகைப் பயிர்களின் விதைப் பண்ணை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிமங்கலம் வட்டாரத்துக்குட்பட்ட கொங்கல் நகரத்தில் உள்ள விவசாயியின் தோட்டத்தில் 6 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள வம்பன்8 சான்று நிலை உளுந்து விதைப்பண்ணையில் திருப்பூர் மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர் கூறியதாவது:-

மக்காச்சோள விதைப்பு எந்திரத்தில் சிறிய மாறுதல்கள் மேற்கொண்டு உளுந்து விதைப்பதன் மூலம் இந்த விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. .உளுந்து விதைப்பைப் பொறுத்த வரை ஒரு ஏக்கரில் கைகளால் விதைப்பு செய்வதற்கு 2 பணியாளர்களுக்கு ஒரு நாள் பிடிக்கும். அதே நேரத்தில் இந்த எந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் ஒரு ஏக்கர் விதைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

அதிக மகசூல்

நல்ல இடைவெளி, காற்றோட்டம், சீரான சூரிய வெளிச்சம், தண்ணீர், உரம், மருந்து கிடைப்பதால் உளுந்து செடிகளில் பூக்கள் அதிகளவில் பிடித்து காய்க்கும் திறனும் மேம்படும்.வம்பன் 8 ரகமானது 60 முதல் 70 நாட்களில் வளரும். உளுந்து விதைப்பண்ணைகளில் பூக்கும் பருவத்திலும் முதிர்ச்சிப் பருவத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.ஆய்வின் போது விதை ஆதாரம், பயிர் விலகு தூரம், கலவன்கள் சதவீதம், வயல் தரம் உள்ளிட்ட காரணிகள் ஆய்வு செய்யப்படும். கலவன்கள் ஆதார நிலை விதைப்பண்ணைக்கு 0.1% ம் சான்று நிலைக்கு 0.2% ம் இருக்குமாறு வயல் தரங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு வயல் தரங்கள் பராமரிக்கப்படாத விதைப் பண்ணைகள் தகுதி நீக்கம் செய்யப்படும்'என்று அவர் கூறினார்.மேலும் உரிய நேரத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு உடனுக்குடன் தொழில்நுட்பத் தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குமாறு விதைச்சான்று அலுவர்களுக்கு அறிவுறுத்தினார்.

---


Related Tags :
Next Story