உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியது தான்
தி.மு.க. அரசின் 2 ஆண்டு கால சாதனை என்றால் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியது தான் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
சிவகாசி,
தி.மு.க. அரசின் 2 ஆண்டு கால சாதனை என்றால் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியது தான் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
பொதுக்கூட்டம்
சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் கிராமத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 500 பேருக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்திற்கும் மூடுவிழா கண்டது தான் தி.மு.க.வின் சாதனை ஆகும். தி.மு.க. ஆட்சியில் புதியதாக எந்ததிட்டமும் கொண்டுவரவில்லை. எழுதாத போனாவுக்கு சிலை வைக்க முடிவு செய்ததும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியதும் தான் தி.மு.க. அரசின் 2 ஆண்டு கால சாதனை ஆகும்.
உண்மையான வெற்றி
ஈரோட்டில் தி.மு.க. வெற்றி பெற்றது தனிக்கதை. அங்கு அ.தி.மு.க. 44 ஆயிரம் வாக்குகள் பெற்றது தான் உண்மையான வெற்றி. வாக்காளர்களையே அடைத்து வைத்து வாக்கு செலுத்த முடியாமல் செய்து விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், அனைத்துலக எம்.ஜி. ஆர்.மன்ற மாநில துணை செயலாளர்கள் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், கலாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ. வரதராஜன், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் விஜயகுமரன், முகம்மது நைனார், கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா, தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், புதுப்பட்டி கருப்பசாமி, காசிராஜன், டாக்டர் விஜயஆனந்த், ஒன்றிய கவுன்சிலர் மீனாட்சி சுந்தரி, மகளிர் அணி தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.