உச்ச மாகாளியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்


உச்ச மாகாளியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்
x

அறந்தாங்கி அருகே உச்ச மாகாளியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே உள்ள ஆவணத்தான்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற உச்ச மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக தேர் பழுதடைந்த நிலையில் தேர்திருவிழா நடைபெறவில்லை. இதையொட்டி புதிய தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையொட்டி உச்ச மாகாளியம்மனுக்கு காலை, மாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் உச்ச மாகாகாளியம்மன் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். காலை 11.30 மணியளவில் தேர் காலில் தேங்காய் உடைத்து தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேர் 4 வீதிகளில் சுற்றி மீண்டும் கோவிலை வந்தடைந்தது.


Next Story