நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது - தர்மபுரியில் பரபரப்பு


நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது - தர்மபுரியில் பரபரப்பு
x

அவர்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஏரியூர் பகுதிகளில் காவல் ஆய்வாளர் யுவராஜ் அடங்கிய குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் இருவர் கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை தூக்கி எறிந்துவிட்டு ஓட முயற்சித்தனர்.

அவர்களை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை மேற்கொண்டதில், ஏமனூர் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் தமிழரசு என தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story