திருச்சி நாடாளுமன்ற தொகுதி; துரை வைகோ வெற்றி


திருச்சி நாடாளுமன்ற தொகுதி; துரை வைகோ வெற்றி
x

கோப்புப்படம்

திருச்சி மக்களவை தொகுதியில் துரை வைகோ 5,42,213 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

திருச்சி,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருச்சி மக்களவை தொகுதியின் தி.மு.க கூட்டணி வேட்பாளரும், வைகோவின் மகனுமாகிய துரை வைகோ 5,42,213 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அவரைத்தொடர்ந்து அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா 2,29,119 வாக்குகள் பெற்று 2வது இடமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் 1,07,458 வாக்குகள் பெற்று 3வது இடமும், அ.ம.மு.க வேட்பாளர் செந்தில்நாதன் 1,00,747 வாக்குகள் பெற்று 4வது இடமும் பெற்றுள்ளனர்.


Next Story