காவிரி பிரச்சினைக்கு மரம் சார்ந்த விவசாயமே தீர்வு - ஜக்கி வாசுதேவ் கருத்து
காவிரி பிரச்சினைக்கு மரம் சார்ந்த விவசாயமே தீர்வு என்று ஜக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
காவிரி தாய்க்கு நாம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாது, ஆனால் கோடைகாலத்தில் குறைந்து போதல் மற்றும் வறண்டு போவதால் அவதியுறுகிறாள்.
83 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட காவிரி வடிநிலப் பகுதியில் பெரிய அளவில் மரம் சார்ந்த விவசாயம் மற்றும் தாவரங்களை வளர்ப்பது மட்டுமே, காவிரி வருடத்தில் 12 மாதங்களும் மிகுதியாக பாய ஒரே வழி. வறண்டு கிடக்கும் தண்ணீருக்காக போராடுவதைவிட காவிரி தாயை வலுப்படுத்தி மேம்படுத்துவோம். ஞானம் மேம்படட்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story