விவசாயிகளுக்கு பயிற்சி
காரியாபட்டி அருகே விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விருதுநகர்
காரியாபட்டி,
காரியாபட்டி தாலுகாவில் ஊரகப்பணி அனுபவ திட்டத்தில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் திருவரசி, அஞ்சலி மற்றும் அனகா ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளின் குறை, நிறைகளை கண்டறிந்து பயின்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முடுக்கன்குளம் கிராமத்தில் மாணவி திருவரசி இலை வண்ண அட்டை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில் முடுக்கன்குளம் பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். இதில் எவ்வாறு இலை வண்ண அட்டையை பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story