"வணிகவரி சோதனைகள் பழிவாங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுவதில்லை" - அமைச்சர் மூர்த்தி


வணிகவரி சோதனைகள் பழிவாங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுவதில்லை - அமைச்சர் மூர்த்தி
x

வணிகவரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது எனவும் அதில் யாருடைய தலையீடும் இல்லை எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை ஒத்தகடை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வணிகவரி சோதனைகள் பழிவாங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுவதில்லை என்று கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது;-

"வணிகவரித்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் காரணமாக வரி செலுத்தாத வணிகர்கள் பயத்தோடு வரி கட்டி வருகிறார்கள். கடந்த 6 மாத காலத்தில் வணிகவரித்துறை மூலம் 18,000 கோடி ரூபாய் வருவாயும், பத்திரப்பதிவுத்துறை மூலம் 2,300 கோடி ரூபாய் வருவாயும் ஈட்டப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை மூலம் 1.50 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வணிகவரி சோதனைகள் நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்படுகிறது. அதில் யாருடைய தலையீடும் இல்லை. வணிகவரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. யாரையும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நடவடிக்கையாக வணிகவரி சோதனைகள் நடத்தப்படுவதில்லை."

இவ்வாறு அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


Next Story