அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
தொடர் விடுமுறையையொட்டி நேற்று அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து, குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர்
விக்கிரமசிங்கபுரம்:
தொடர் விடுமுறையையொட்டி நேற்று அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து, குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர்.
அகஸ்தியர் அருவி
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது.
இந்த அருவியில் ஆண்டு முழுவதும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், ஆன்மிக அருவியாக இருப்பதாலும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
குளித்து மகிழ்ந்தனர்
இந்த நிலையில் நேற்று முதல் மாணவ-மாணவிகளுக்கு 12 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. இதனாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் கார் மற்றும் வேன்களில் அகஸ்தியர் அருவிக்கு வந்தனர்.
அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். அப்போது குழந்தைகளும் தங்கள் பெற்றோருடன் அருவிகளில் குதூகலத்துடன் குளித்தனர்.