பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்


பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

கோடை விடுமுறையையொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

ஈரோடு

பவானிசாகர்:

பவானிசாகர் அணை முன்பு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் படகு இல்லம், ஊஞ்சல், சறுக்கு, சிறுவர் ரெயில், கொலம்பஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் வசதிக்காக அழகிய புல் தரைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மே மாத கோடை விடுமுறை என்பதால் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பவானிசாகர் அணை பூங்காவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் பவானிசாகர் அணை பூங்காவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சிறுவர் சிறுமிகள் அங்குள்ள ஊஞ்சல், சறுக்கு, சிறுவர் ரயில், கொலம்பஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் புல்தரையில் அமர்ந்து உணவு மற்றும் தின்பண்டங்களை உண்டு மகிழ்ந்தனர். பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்ததால் பூங்கா பகுதி களைகட்டி காணப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story