விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
கன்னியாகுமரி ,
கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி கடந்த 3 நாட்களாக தியானம் செய்து வருகிறார். இதற்காக நேற்று முன்தினம் மாலை பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்தார். இன்று 3-வது நாளாக அங்கு பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டுள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. .மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கான தடை அமலில் இருக்கும் என்று பூம்புகார் படகு கழகம் தெரிவித்துள்ளது.பிரதமர் மோடி தனது தியானத்தை முடித்துக்கொண்டு இன்று பிற்பகல் 3 மணிக்கு புறப்படுகிறார்.
Related Tags :
Next Story