புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
சீர்காழி அருகே புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது 2,250 பாக்கெட்டுகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை சாலை மேல செங்கமேடு என்ற இடத்தில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து சீர்காழி நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த நபரை விசாரணை செய்ததில் அவர் திண்டுக்கல் மாவட்டம் செந்துறை கழுவடி மலை பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் கோபி (வயது 28) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து சீர்காழி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2250 புகையிலை பாக்கெட்டுகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.