குரங்கம்மை நோய் பரவலை தடுக்க கம்பம்மெட்டு பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரம்


குரங்கம்மை நோய் பரவலை தடுக்க  கம்பம்மெட்டு பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரம்
x

குரங்கம்மை நோய் பரவலை தடுக்க கம்பம்மெட்டு பகுதியில் கண்காணி்ப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

தேனி

கேரளாவில் குரங்கம்மை நோய் பரவ தொடங்கி உள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லைப்பகுதியான குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு விவசாய தொழிலாளர்கள் வேலை சென்று வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் குரங்கம்மை நோய் பரவலை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கம்பம்மெட்டு வழியாக வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களை சோதனை செய்யும் வகையில் கம்பம்மெட்டு சாலையில் உள்ள பழைய போலீஸ் சோதனை சாவடியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் முருகன் தலைமையில், புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் சுகாதாரத்துறையினர் உள்ளனர். அவர்கள் கேரளாவில் இருந்து வாகனங்களில் வருபவர்களிடம் காய்ச்சல், தலைவலி, குரங்கம்மை நோய்க்கான கை மற்றும் உடல்களில் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா? என சோதனை செய்கின்றனர்.


Next Story