ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டம்
சேலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது பாக்கெட் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு. சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் அட்டை மூலமாக வழங்கப்படுகிறது. ரேஷன் அட்டையை பொருத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறுபடும். ரேஷன் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்களை வினியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளில் தலா ஒரு ரேஷன் கடையை தேர்வு செய்து பாக்கெட்டுகளில் பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக சேலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது பாக்கெட் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story