கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தினத்தந்தி 30 Dec 2023 11:00 AM IST (Updated: 30 Dec 2023 2:14 PM IST)
t-max-icont-min-icon

ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 12-ம் தேதி 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் இன்று திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். பேருந்து நிலைய கல்வெட்டு மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் பேட்டரி காரில் அமர்ந்தபடி பேருந்து நிலையத்தை பார்வையிட்டார்.

அதன்பின்னர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து விரைவு பேருந்துகள் மற்றும் மாநகர பேருந்துகள் புறப்பட்டுச் சென்றன.


Next Story