திருவாரூர்: நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் நேரில் ஆய்வு


திருவாரூர்: நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் நேரில் ஆய்வு
x

டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர்,

பருவம் தவறி பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பல ஆயிரம் ஹெக்டேர்களில் பயிரிடப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் மழை நீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், விவசாயிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இதனையடுத்து டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குர்டி அருகே ரிஷியூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விவசாயிகள் மத்திய குழுவினரிடம் நெல்லின் ஈரப்பதத்தை 19-ல் இருந்து 25 ஆக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.




Next Story