திருவள்ளூர் ரெயில் விபத்து: ரெயில் சேவைகள் மாற்றியமைப்பு


திருவள்ளூர் ரெயில் விபத்து: ரெயில் சேவைகள் மாற்றியமைப்பு
x

திருவள்ளூரில் ஏற்பட்ட ரெயில் விபத்து காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு நேற்று இரவு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் சென்றபோது தண்டவாளத்தில் ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் தீப்பிடித்தன. ரெயில் பெட்டிகள் தடம் புரண்டன.

சிக்னல் கோளாறு காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் லூப் லைன் பாதைக்கு சென்றுள்ளது. லூப் லைனில் ஏற்கனவே சரக்கு ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அதன்மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியுள்ளது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் ஏற்பட்ட பகுதியில் ரெயில் பெட்டிகள் தடம்புரண்டு கிடப்பதால் அதை அகற்றும் பணிகளை ரெயில்வே, மீட்புக்குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரெயில் விபத்து காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஹவுரா - திருச்சி ரெயில் எழும்பூர் வரமால் ரேனிகுண்டா, காஞ்சிபுரம், விழுப்புரம் வழியாக செல்லும்.

கோரக்பூர் - கொச்சுவேலி ரெயில் சென்னை வரமால் ரேனிகுண்டா, மேல்பாக்கம், காட்பாடி வழியாக செல்லும்.

எழும்பூர் - ஜோத்பூர் ரெயில் அரக்கோணம், ரேனிகுண்டா, கூடூர் வழியாக செல்லும்.

நெல்லை - புரூலியா ரெயில் அரக்கோணம் வராமல் மேல்பாக்கம், ரேனிகுண்டா வழியாக செல்லும்.

சென்னை - ஐதராபாத் ரெயில் சூலூர்பேட்டை வராமல் அரக்கோணம், ரேனிகுண்டா வழியே செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


Next Story