திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.64 லட்சம்
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 19 நாட்களில் ரூ.64 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.
திருவள்ளூர்
திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு செல்கின்றனர். பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகின்றனர்.
பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தை முருகன் மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷா, சுரேஷ்பாபு, நாகன், மோகனன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கடந்த 19 நாட்களில் ரூ.64 லட்சத்து 90 ஆயிரத்து 989 மற்றும் 161 கிராம் தங்கம், 4 கிலோ 273 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
Related Tags :
Next Story