திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்


திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
x

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருநள்ளாறு,

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க, உற்சவர்கள் தேரில் எழுந்தருளினர். அங்கு தீபாராதனை காட்டப்பட்டு காலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

அமைச்சர் சாய் சரவணன் குமார், திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ., சிவா, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

அணிவகுத்த 5 தேர்கள்

இதையடுத்து சொர்ண கணபதி தேர் முன்செல்ல, 2-வது சுப்பிரமணியர், 3-வது பெரிய தேரில் செண்பக தியாகராஜர், 4-வது நீலோத்பலாம்பாள், 5-வது சண்டிகேஸ்வரர் தேர் மாட வீதிகளில் அணிவகுத்து சென்றன.

காரைக்கால், திருநள்ளாறு மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள், 'தியாகேசா, தியாகேசா' என விண்ணதிர பக்தி கோஷங்கள் எழுப்பி தேரை இழுத்துச் சென்றனர்.

கோவில் நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தேர்கள் மாலையில் மீண்டும் தேரடிக்கு வந்து சேர்ந்தன.


Next Story