குளித்தலையில் அரசு, தனியார் பஸ் ஊழியர்களிடையே நேர பிரச்சினை


குளித்தலையில் அரசு, தனியார் பஸ் ஊழியர்களிடையே நேர பிரச்சினை
x

குளித்தலையில் அரசு, தனியார் பஸ் ஊழியர்களிடையே நேர பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

கரூர்

வாகன ஓட்டிகள் அவதி

கரூர் மாவட்டம், குளித்தலை வழியாக திருச்சி, கரூர், மணப்பாறை, முசிறி மார்க்கங்களாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார், அரசு பஸ்கள் அரசு நகர பஸ்கள் போன்றவை வந்து செல்கின்றன. அனைத்து பஸ்களும் குளித்தலை பஸ் நிலையம் வழியாகவே வந்து நகரப் பகுதிகளுக்குள் பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்ல வேண்டும்.

அவ்வாறு அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஒரே பகுதியில் இருந்து குளித்தலை நகரப் பகுதிக்குள் வரும்பொழுது நகரப் பகுதிகளுக்குள் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளை தங்கள் பஸ்களில் ஏற்ற வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு சென்று பயணிகளை ஏற்றுகின்றனர்.

அவ்வாறு செல்லும்போது அரசு மற்றும் தனியார் பஸ் ஊழியர்களிடையே பிரச்சினை ஏற்படுகிறது. இதன் காரணமாக தினசரி குளித்தலை பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அவ்வப்போது ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

பிரச்சினை

அதேபோல நேற்று இரவு குளித்தலை பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பிய அரசு மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் இடையே நேரம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு ஒருவர் திட்டிக்கொண்டனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அந்தந்த பஸ் ஊழியர்கள் தங்களது பஸ்களை எடுத்துச் சென்றனர். இதுபோன்று பல்வேறு சமயங்களில் பிரச்சனைகள் ஏற்படும் போது பஸ் ஊழியர்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகள் கூறி திட்டி கொள்கின்றனர்.

கோரிக்கை

இதுபோன்று தகாத வார்த்தைகளால் திட்டிக் கொள்வது பயணிகள் மற்றும் பொதுமக்களை முகம்சுழிக்க வைக்கிறது. நாள்தோறும் நேர பிரச்சினை தொடர்பாக அரசு மற்றும் தனியார் பஸ் ஊழியரிடம் ஏற்படும் பிரச்சி னைகளை தீர்க்க நிரந்தர தீர்வு ஏற்படாதா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே இது போன்ற பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கையை முன் வைக்கின்றனர்.


Next Story