ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்பட 3 பேர் இலங்கை பயணம்


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்பட 3 பேர் இலங்கை பயணம்
x

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்பட 3 பேர் இன்று இலங்கை புறப்பட்டு சென்றனர்.

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளான பேரறிவாளன், ரவிச்சந்திரன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு விடுதலை செய்தது. இவர்களில் முருகன், சாந்தன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

இதில் சாந்தன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 28ம் தேதி உயிரிழந்தார். எஞ்சிய 3 பேரும் தங்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க அரசிடம் விண்ணப்பித்தனர். பின்னர், கோர்ட்டு தலையீட்டை தொடர்ந்து 3 பேரும் இலங்கைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், முருகன், ஜெயக்குமார், ராபர்ட்பயஸ் ஆகிய 3 பேரும் இன்று இலங்கை அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 3 பேரும் நேற்று சென்னை அழைத்து வரப்பட்டனர். பின்னர், 3 பேரும் இன்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இலங்கை புறப்பட்டு சென்றனர்.


Next Story