மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்


மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 3-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சேவை புரிந்த நபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக கீழ்காணும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

சிறந்த ஆசிரியருக்கு (பார்வைத்திறன் அல்லது செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல் மற்றும் அறிவுசார் குறையுடையோருக்கு கற்பித்தல்) தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இதைபோல சிறந்த சமூக பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த டிரைவர் மற்றும் கண்டக்டர், பொதுகட்டிடங்களில் மாற்றுத்திறனாளிளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்றவை விருது பெற விண்ணப்பிக்கலாம்.

தகுதி வாய்ந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பத்தினை www.scd.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுறக்கம் செய்து அவற்றை பூர்த்தி செய்து அனைத்து சான்றுகளுடன் இரண்டு நகல்களுடன் வருகின்ற 25-ந்தேதிக்குள் செங்கல்பட்டு கோர்ட்டு அருகில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story