வீரகோதண்டராமர் கோவிலில் திருவிளக்கு பூஜை


வீரகோதண்டராமர் கோவிலில் திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு அருகே வீரகோதண்டராமர் கோவிலில் திருவிளக்கு பூஜை

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் நான்காம் சேத்தி கோவில் குளம் பகுதியில் அமைந்துள்ளது வீர கோதண்ட ராமர் கோவில். இக்கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக வீர கோதண்ட ராமர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் கோவிலின் எதிரே 300-க்கும் மேற்பட்ட பெண்கள் அமர்ந்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story