கோதண்டராமர் கோவிலில் திருமஞ்சனம் நிறைவு
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் திருமஞ்சனம் நிறைவு
வடுவூர்:
வடுவூரில் மிகவும் புகழ்பெற்ற கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரை 30 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி கடந்த ஆடி மாதம் திருமஞ்சனம் தொடங்கியது. விழா நாட்களில் சாமிகளுக்கு பல்வேறு மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. விழா நாட்களில் சாமிகளுக்கு கவசம் அணிவிக்காமல் வஸ்திர சேவையில் அருள்பாலித்து வந்தனர். திருமஞ்சனம் நிறைவடைந்ததை தொடர்ந்து சாமிகளுக்கு கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உற்சவர் சாமிகளை மூலவர் சன்னதியின் முன்பு எழுந்தருள செய்தனர். தொடர்ந்து கோதண்ட ராமர், சீதாதேவி லட்சுமணன் அனுமன் சாமிகள் மற்றும் கோவிலில் சாமிகளுக்கு கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத கோபாலன், ஆண்டாள், ஹயக்ரீவர் மற்றும் ஆழ்வார்கள் எழுந்தருள செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.