முருகன் கோவில்களில் திருக்கல்யாணம்
நெல்லையில் கந்த சஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லையில் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள், அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது. நெல்லை சந்திப்பு பாளையஞ்சாலை குமாரசுவாமி கோவிலில் நேற்று இரவு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. மேலவாசல் முருகன் கோவில், நெல்லையப்பர் கோவில், பாளையங்கோட்டை சிவன் கோவில் முருகன் சன்னதிகளிலும் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story