நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது


நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
x

தொடர் விடுமுறை முடிந்ததை தொடர்ந்து, சொந்த ஊருக்கு வந்திருந்தவர்கள் வெளியூர்களுக்கு மீண்டும் திரும்பியதால் நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் நெல்லை எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும். பாசஞ்சர் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி காந்தி ஜெயந்தி, 4-ந்தேதி ஆயுத பூஜை, 5-ந்தேதி விஜயதசமி ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு, வெளியூர்களில் வேலை பார்த்து வரும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

தொடர் விடுமுறை முடிந்ததை தொடர்ந்து அவர்கள் மீண்டும் பணிக்கு செல்வதற்காக வெளியூர்களுக்கு புறப்பட்டனர். இதனால் நேற்று மாலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் ஏராளமானோரும் நேற்று ஊருக்கு திரும்பினர். இதனால் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு வந்த ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை போக்குவரத்து போலீசார் சரிசெய்தனர்.



Next Story