வல்லூர் அனல்மின் நிலையத்தில் 15 டன் இரும்பு பொருட்கள் திருட்டு - டிரைவர் உள்பட 4 பேர் கைது


வல்லூர் அனல்மின் நிலையத்தில் 15 டன் இரும்பு பொருட்கள் திருட்டு - டிரைவர் உள்பட 4 பேர் கைது
x

வல்லூர் அனல்மின் நிலையத்தில் 15 டன் இரும்பு பொருட்கள் திருட்டிய டிரைவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

மீஞ்சூரை அடுத்த வல்லூர் கிராமத்தில் மத்திய அரசின் தேசிய அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு மேற்பார்வையாளராக சதீஷ்குமார் (வயது 33), பாதுகாப்பு அலுவலராக அக்பர் (27), மற்றொரு பிரிவில் மேற்பார்வையாளராக சரண்ராஜ் (29) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள், வல்லூர் அனல் மின் நிலையத்தில் இருந்து ஒரு லாரியில் 15 டன் பழைய இரும்புகளை அதே பகுதியில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் இறக்காமல் அனல்மின் நிலையத்துக்கு வெளியே குருவிமேடு கிராமத்தின் வழியாக கொண்டு சென்று விற்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் லாரியை மடக்கிப்பிடித்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார், அக்பர், சரண்ராஜ் மற்றும் லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூைர சேர்ந்த பதிஷ்குமார் (52) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.


Next Story