சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121 அடியை எட்டியது
தொடர் மழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121 அடியை எட்டியது. இதையடுத்து கரையோரம் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி
பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 126.28 அடியாகும். கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று அணையின் நீர்மட்டம் 121 அடியை எட்டியது. இதனால் பொதுப்பணித்துறை சார்பில் வராக நதி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஓரிரு நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story