மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி


மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி
x

ராசிபுரத்தில் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது.

நாமக்கல்

மனதின் குரல் நிகழ்ச்சி

பிரதமர் மோடி, வானொலியில் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் ('மன் கி பாத்') என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார். பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசும் அவர், சாதனை செய்த நபர்களுடன் உரையாடி, அவர்களை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் 100-வது பகுதி நேற்று ஒலிபரப்பானது. இதைக்கேட்க நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

அதையொட்டி முன்னதாக நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் பல்வேறு இடங்களில் பிரதமரின் உரையாடலை பொதுமக்கள் மத்தியில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ராசிபுரத்தில் பா.ஜ.க. மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, துணை தலைவர் முத்துசாமி, நகர செயலாளர் வேலு மற்றும் நிர்வாகிகள், பொதுமக்களுடன் சேர்ந்து பிரதமரின் உரையை பார்த்தனர்.

கோலப்போட்டி

முன்னதாக பிரதமர் மோடியின் உரையை வரவேற்கும் வகையில் பா.ஜ.க. சார்பில் கோலப்போட்டி நடத்தப்பட்டது. அதில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோல் நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. மருத்துவ பிரிவு சார்பில் மாவட்ட துணைத் தலைவர் ஜீவிதன் தலைமையில் நாமக்கல்லில் 4 இடங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் டாக்டர்கள் பிரவீன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story