பலத்த காற்று வீசியதால் மரம் முறிந்து விழுந்தது
வெண்ணந்தூரில் பலத்த காற்று வீசியதால் மரம் முறிந்து சாலையில் விழுந்தது.
நாமக்கல்
வெண்ணந்தூர்
வெண்ணந்தூர் சுற்று வட்டார பகுதியில் அனல் காற்றுடன் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று வீசியது. இதையடுத்து லேசான மழை பெய்தது. இதில் வெண்ணந்தூரிலிருந்து-ராசிபுரம் செல்லும் பிரதான சாலையில் எட்டி மரம் பஸ் நிறுத்தம் அருகே சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பந்தப்பட்ட துறையினர் சென்று மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மாலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி, பஸ்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
Related Tags :
Next Story