ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x

ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி எஸ்.எஸ். தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து மகன் சீரங்கம் (வயது 26). இவரும் ஆலங்குடி அருகே மைக்கேல்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகள் அகல்யா (20) என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இருவரும் ஆலங்குடி காளிகோவிலில் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா, இருதரப்பு பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். பின்னர் காதல் ஜோடி வயதை காரணம் காட்டி போலீசார் இருவரையும் அனுப்பி வைத்தனர்.


Next Story