ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x

ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

புதுக்கோட்டை

மன்னார்குடி வடசேரி ரோடு பகுதியை சேர்ந்த பாலசேகரன் மகன் ரோஷ்நேஷ் (வயது 24). இவர், டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா பல்லவராயன் பத்தை கொண்டையன்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் சுகன்யா (24). இவர் பி.எஸ்.சி. நர்சிங் படித்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்்தனர். இந்நிலையில், இருவரும் நாகப்பட்டினத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகம்மை இரு தரப்பு பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த பெண் குடும்பத்தார் தங்களுக்கும், சுகன்யாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று எழுதி கொடுத்து விட்டு சென்றனர். இதையடுத்து மணமகன் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு காதல் ேஜாடியை அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.


Next Story