குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்


குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்
x

தேவர்சோலையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று செயல் அலுவலரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

நீலகிரி

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி 11-வது வார்டு கன்னட பாடி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் செயல் அலுவலர் மோசசை சந்தித்து சீராக குடிநீர் வினியோகம் செய்து, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட செயல் அலுவலர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

1 More update

Next Story