தாம்பரம் மாநகராட்சிக்கு போதுமான பணியாளர்களை நியமிக்க நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் கோரிக்கை மனு வழங்கிய மேயர்


தாம்பரம் மாநகராட்சிக்கு போதுமான பணியாளர்களை நியமிக்க நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் கோரிக்கை மனு வழங்கிய மேயர்
x

தாம்பரம் மாநகராட்சிக்கு போதுமான பணியாளர்களை நியமிக்க நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் கோரிக்கை மனுவை மேயர் வசந்தகுமாரி வழங்கினார்.

சென்னை

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம், சேலையூர சுடுகாடு பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021- 22 கீழ் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் எல்.பி.ஜி. எரிவாயு தகனமேடை பணியினை நகராட்சி நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா ஐ.ஏ.எஸ். நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ .காமராஜ், உதவி செயற்பொறியாளர் பெட்ஸி ஞானலதா உள்பட ஏராளமான அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது மேயர் வசந்தகுமாரி, தாம்பரம் மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 5 பே ரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இம்மாநகராட்சியின் அன்றாட பணிகளான சுகாதார பணிகள், குடிநீர், தெருவிளக்கு, மற்றும் அடிப்படை பணிகளை மேற்கொள்வதற்கும், பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்திட போதுமான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாமல் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள சிரமமாக உள்ளது. எனவே தாம்பரம் மாநகராட்சிக்கு தேவையான போதுமான உதவியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க கோரி நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்.


Next Story